மும்பையில் நடைபெற்ற 2019 Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
மும்பையில் நடைபெற்ற Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு வந்த பிரபலங்கள் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிந்து வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பினை ஏற்ற பிரபலங்கள் பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு உற்சாக போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன்,சோனம் கபூர், ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் இந்த அலங்கார அணிவகுப்பில் கலந்துக் கொண்டனர்.
இவர்கள் அனைவரும் தனித்தனியாகவும், மொத்தமாகவும், வித விதமான போஸ் கொடுத்தனர். மேலும் மூத்த நடிகையான ஹேமா மாலினி கண்ணியமான முறையில் அழகிய சேலை அணிந்து வந்து அசத்தினார்.
இளம் நடிகைகளுக்குப் போட்டியாக மாதுரி தீக்சிட் தோள்பட்டை தெரியும் ஆடை அணிந்து வந்தார். இறுதியாக ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி சிவப்பு நிற கவுனில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.