Categories
கரூர் மாவட்ட செய்திகள்

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய தந்தை மகன்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணத்தினால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. பலரும் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தந்தை மகன் இருவரும் யூடியூப்பில் சாராயம் காய்ச்சுவது எப்படி என்பதை பார்த்து குக்கரில் சாராயம் தயார் செய்துள்ளனர்.

அவர்கள் குடித்தது போக மீதமுள்ள சாராயத்தை எடுத்து பாட்டில்களில் நிரப்பி தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விற்பனை செய்வதற்கு தயார் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்கள் காய்ச்சி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |