சமீபத்தில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் இளம் பெண் ஒருவரிடம் பிரபல யூடியூப் சேனல் ஒன்று ஆபாசமாக கேள்விகளை கேட்டு அதனை இணையத்தில் வெளியிட்டு வைரலாகியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில்,
தமிழகம் முழுவதும் உள்ள யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் சைபர் கிரைம் மூலம் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என தமிழக காவல்துறை தற்போது அறிவித்துள்ளது. மேலும் ஆபாச வீடியோக்களை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருந்தால், ஷேர் செய்து இருந்தால் உடனே நீக்கி விடும்படியும், இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.