டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களுடன் போட்டியிட யூடியூப் தயாராகி வருகிறது. நீங்கள் ஷார்ட்ஸ் (Youtube Shorts) உருவாக்கும் கிரியேட்டராக இருப்பின், அதிகபணம் சம்பாதித்து மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏனெனில் மானிடைசேஷனைக் கொண்டுவர யூ-டியூப் திட்டமிட்டு உள்ளது. இது அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் தற்போது YouTube கிரியேட்டர்ஸ் பார்ட்னர் திட்டத்தில் சேர்க்கப்படும். அதன்படி இதற்குத் தகுதி பெறும் படைப்பாளிகள் விளம்பரம் வாயிலாக பணம் சம்பாதிக்கும் பொன்னான வாய்ப்பைப் பெறுவார்கள்.
மிகமுக்கியமான விஷயம் என்னவெனில் தகுதிபெறாத படைப்பாளிகளுக்கு கூட YouTube சில சிறப்பு விருப்பங்களை வெளியிடவுள்ளது. தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின் அடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறாத படைப்பாளிகள் உதவிக் குறிப்புகள், சந்தாக்கள் மற்றும் வணிக விற்பனை வாயிலாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். Youtube-ல் இருந்துவரும் இப்புதிய திட்டத்தின் கீழ், TikTok-ஐ விட அதிக பணமாக்குதல் விருப்பங்களைப் பெறுவீர்கள்.
இதன் வாயிலாக யூடியூப் நிறுவனம் போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது. சுமார் 1.5 வருடங்களுக்கு முன் ஷார்ட்ஸ் வீடியோ அம்சத்தை யூ டியூப் துவங்கியது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதை யூடியூப் மேலும் விரிவாக்கியது. யூடியூப் நிறுவனத்தின் கிரியேட்டர் தயாரிப்பு பிரிவின் துணைத்தலைவர் கூறியதாவது, வரும் வருடங்களில் இந்த அம்சம் இன்னும் வேகமாக மக்களைச் சென்றடையும். மாதந்தோறும் 1.5 பில்லியன் மக்கள் ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.