Categories
சினிமா தமிழ் சினிமா

YouTube-ல் திரைப்படங்களை ட்ரோல் செய்பவர்களுக்கு…. நடிகர் அஜித்தின் தரமான சம்பவம்…!!!

திரைப்படங்கள் குறித்து youtube இல்  கடுமையாக விமர்சிப்பவர்களை குறித்து நடிகர் அஜித் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, அவர்களிடம் படங்களை விமர்சனம் செய்யாதீர்கள் என சொல்வது, மாமிசம் விற்கும் கடைக்காரரிடம் விலங்குகளை கொல்லாதீர்கள் என சொல்வதுபோன்றுதான். அவரிடம் கேட்டால் அசைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். பொருளுக்கு மார்க்கெட் இருக்கிறது. நான் செய்யவில்லை என்றால் இன்னொருவர் செய்வார் என கூறுவார்.

அதேபோல தான் ட்ரோல்கள், நெகடிவ் விமர்சனங்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அதைவைத்துதான் அவர்கள் வருமானம் ஈட்டி குடும்பம் நடத்த முடியும் என்றால், அதனால் இன்னொருவரது வாழ்வாதரத்திற்கு எந்த பிரச்சனையும் வரவில்லை என்றால் அதை ஏற்றுகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |