மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல கேமிங் யூடியூபர் அபியுதய் மிஸ்ரா உயிரிழந்தார். ஸ்மார்ட்போன்களில் விளையாடும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர், மல்டி பிளேயர் ஷூட்டர் உள்ளிட்ட கேம்கள் குறித்த வீடியோக்களை ‘ஸ்கைலார்ட்’ என்ற பெயரில் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில், சோஹாக்பூர் அருகே பைக்கில் சென்றபோது, டிரக் மோதியதில் மிஸ்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
YouTube பிரபலம் சாலை விபத்தில் மரணம்….. சோகம்…!!
