வீட்டைவிட்டு சென்ற மகளை மீது தருவதாக கூறி 5 லட்சம் மோசடி
மயிலாடுதுறை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஷீலா. இவரது மகள் சுவாதி கடந்த 5 ஆம் தேதி மோகன் பாண்டியன் என்ற இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடி சென்றுவிட்டார். இந்நிலையில் அவரை மீட்டுத் தருவதாக கூறி மகிழ்மாறன் மற்றும் சுமேஸ்வரன் 5 லட்சம் கேட்டுள்ளனர். மகளை மீட்டுத் தருவதாக கூறியதால் 5 லட்சம் கொடுத்துள்ளார் ஷீலா. ஆனால் அவர்கள் இதுவரை மகளை மீட்டு கொடுக்கவில்லை எனவே பணத்தை திருப்பி கேட்டுள்ளார் ஷீலா. அவர்கள் பணத்தையும் திருப்பிக் கொடுக்காத காரணத்தினால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஷீலா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மகிழ்மாறன் மற்றும் சுமேஸ்வரனை விசாரித்து வருகின்றனர்.