Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கல்லாலங்குடி திருப்பதி நகரில் சாலையோரம் பெட்டி கடைகளில் சோதனை செய்துள்ளனர்.

அந்த பெட்டி கடையில் திருப்பதி நகரை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் லாட்டரி சீட்டு விற்றதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |