ஐடி நிறுவன ஊழியர் கூவம் ஆற்றின் பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் கொடுங்கையூரை சேர்ந்த மூர்த்தி என்ற நபர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கூவம் ஆற்றின் அருகே உள்ள நோபியர் பாலத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர் தவறுதலாக கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி அந்த நபரை மீட்டுள்ளனர். மேலும் கூவம் ஆற்றில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் எந்த விபரீதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட கூடாது என போலீசார் எச்சரித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.