Categories
உலக செய்திகள்

திருமணமான சில வாரங்களில்… மகனுக்கு நேர்ந்த சோகம்… கோமாவில் இருக்கும் தாய்… தவிக்கும் மனைவி..!!

தாய் மருத்துவமனையில் கோமாவில் இருக்க திருமணம் முடிந்து சில வாரங்களில் இளைஞன் நீர் வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரட்பார்டை சேர்ந்த பிலால் என்பவர் டேஷ் நதியின் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நதியில் மூழ்கி உள்ளார். இதனைத்தொடர்ந்து உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும், மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில் பெரும் சோகம் என்னவென்றால் பிலாலின் தாய் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார். அதோடு சில வாரங்களுக்கு முன்பு தான் பிலாலுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் கோமாவில் இருக்கும் தனது தாயையும் தனது இளம் மனைவியையும் தவிக்க விட்டுவிட்டு பிலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது இறப்பிற்கு நண்பர்கள் உறவினர்கள் மட்டுமன்றி பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |