இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் வல்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்நாத். உணவு விடுதி ஒன்றில் பணி புரியும் இவர் தனது முதலாளி வீட்டில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலையின் இடைவெளியில் தனது அறைக்கு வந்த நவ்நாத் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருந்தபோது பேஸ்புக்கில் பார்த்த அவரது சக நண்பர்கள் அவரிடம் தற்கொலை செய்து விடாதே என்று கெஞ்சிய நிலையிலும் நவ்நாத் தனது முடிவில் உறுதியுடன் இருந்துள்ளார். ஆனால் அவர் தற்கொலை குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி தற்செயலான மரணம் என்ற பதிவு செய்துள்ளனர்.