Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் போலீஸ் மீது கல்லெறிந்த இளைஞர் கைது….!!

காவல்துறை உதவி ஆய்வாளரை மதுபோதையில் கல்லால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளர்.

சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கதுரை(37). இவர் பணியில் இருக்கும் போது, அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக அரும்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து வாகனத்தில் சென்று விசாரணை செய்யும் போது,

Image result for கைது

போதை ஆசாமி ஒருவர் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கியதில் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது.பின்பு ரத்த காயத்துடன் உதவி ஆய்வாளர் தங்கதுரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உதவி ஆய்வாளரை கல்லால் தாக்கிய போதை ஆசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்கி(18) என்பது தெரியவந்தது.

Categories

Tech |