வெகு நாட்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் லட்சுமணன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக புகார் அளித்துள்ளார். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்து குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.