Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவிய இளைஞர் கைது!

பாகிஸ்தான் உளவுத் துறைக்கு ரகசிய தகவல்களை கசியவிட்ட இளைஞர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு காவல் துறை கைது செய்துள்ளது.

ரஷித் அகமது என்ற 23 வயது இளைஞரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு, உளவுத்துறையின் உதவியோடு வாரணாசியில் கைது செய்துள்ளது. பாகிஸ்தான் உளவுத் துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை இவர் தெரிவித்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image result for Youth arrested for helping Pakistani intelligence

மத்திய ஆயுத காவல் படையின் முகாம்கள், ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆறிவற்றை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அவர் அனுப்பியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக அவர் பயன்படுத்திய செல்போனை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர் பாகிஸ்தானுக்கு இரண்டு முறை சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |