சென்னையில் உள்ள தியாகராய நகரில் சுதந்திர போராட்ட தியாகி சிலம்புச் செல்வன் மபொசியின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு 27-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பொதுமக்களால் சிலம்பு செல்வர் என்று மாபொசி அன்போடு அழைக்கப்படுகிறார்.
இவருக்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும். அதோடு தமிழக அரசும் மாபொசியின் பெயரால் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்துல் கலாம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்று பாடபுத்தகத்தில் ஒரு கேள்வி இருப்பதை பார்க்கும்போது கோபமாக வருகிறது. இது குறித்து நிச்சயம் ஒரு நாள் நாங்கள் கேள்வி கேட்போம். அதை எரிப்போம் என்றார். அதன் பிறகு செய்தியாளர் ஒருவர் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குறித்து கேட்டார்.
அதற்கு சீமான் கூறியதாவது, உனக்கு என்னப்பா நீ பைத்தியம். நீ என்ன வேணா பேசுவ, நாங்க அப்படி பேச முடியுமா? என்று எச். ராஜாவை பார்த்து கேட்கத் தோன்றுகிறது என்றார். அதாவது ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என்று சீமான் சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு எச். ராஜா நீ காணாமல் போய்விடுவாய் என்று டுவிட்டரில் விமர்சித்திருந்தார். மேலும் எச். ராஜாவின் இந்த பேச்சுக்கு தான் தற்போது சீமான் பதிலடி கொடுத்திருந்தார்.