அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி, 58 வது குருபூஜையை ஒட்டி நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர், சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு சரிசமமாக மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற அடிப்படை தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளோம்.
இந்த சட்டத்திற்கு யாரும் கோரிக்கை வைக்கல. எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எதிர்க் கட்சியைச் சார்ந்த யாரும் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்களும் கோரிக்கை வைக்க வில்லை. அப்படி இருக்கின்ற நிலையில் அரசு தான் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர்- இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும்,
என்பதற்காக கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும், அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சட்டம் கொண்டுவந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. காலதாமதம் ஆகிவிட்டதால் இதை வைத்து சிலர் அரசியல் வருகிறார்கள். இங்கு அரசியல் எல்லாம் எடுபடாது. அம்மாவின் அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.