கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். அதோடு ஐபோன் வாங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், வேறு வங்கிகளில் கணக்கு திறந்து பணத்தை டெபாசிட் செய்தல் என பல வழிகளில் பணத்தை செலவு செய்துள்ளனர்.
இந்நிலையில் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போனதை தெரிந்து கொண்ட வங்கி அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிதின் மற்றும் மனு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும் வாலிபர்கள் இருவரும் 2 கோடியே 44 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வாலிபர்கள் வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை திருடினார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.