சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள நத்தக்கரை பிரிவு ரோட்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது 2 சரக்கு ஆட்டோவில் 45 மூட்டைகளில் 2 1/2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களை விசாரணை செய்த போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியசீலன், இஸ்மாயில், சடையன் என்பதும் கடலூர் மாவட்டத்திலிருந்து தலைவாசல் பகுதியிலுள்ள கோழிப்பண்ணைக்கு அரிசி கொண்டு செல்வதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.