சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் பிரிவு சாலையில் காங்கேயம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன் பின் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குமார் மற்றும் சரவணகுமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 43 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.