உறவினர்கள் வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி மாவட்டம் ஓடை தெரு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு பாண்டியராஜன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருக்கிறார்.வேலைக்கு செல்லாமல் கையில் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்துவது இவர் வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து செய்துள்ளார். இதுகுறித்து பாண்டியராஜனின் அண்ணன் காளிராஜன் சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அங்குள்ள காவல்துறை அதிகாரி விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.