ஜெர்மன் நாட்டில் சாகச நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இளைஞர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெர்மன் நாட்டில் உள்ள Duisberg என்னும் பகுதியில் சர்க்கஸ் குழு சாகச நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது. அங்கு நன்றாக பயிற்சி மேற்கொண்ட கலைஞர்கள் ஒரு பலகையிலிருந்து வெளியேறி வேறு ஒரு பலகையில் தாவினார்கள். அப்போது Lukazs என்ற நபர் ஸ்கேட்டரில் தாவ முயற்சித்தார்.
அந்த சமயத்தில், அவரின் ரோலர் பிளேட்டில் பழுது ஏற்பட்டது, இதனால் எதிர்முனையில் இருந்த உயரம் அதிகம் கொண்ட மேடையே அவரால் பிடிக்க முடியவில்லை. எனவே, தடுமாறி கீழே விழுந்து விட்டார். 20 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்த காட்சி சக பணியாளர்களை அதிரச் செய்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.