Categories
உலக செய்திகள்

1.5 லிட்டர் கோகோ-கோலா… 10 நிமிடத்தில் குடித்து முடித்த இளைஞர்… பின் நேர்ந்த சோகம்..!!

சீனாவில் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை 10 நிமிடத்தில் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டில் உள்ள பெய்ஜிங் என்னும் நகரில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கோகோ-கோலா 1.5 லிட்டர் வாங்கி அதனை பத்து நிமிடத்தில் குடித்து முடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞருக்கு சில மணி நேரத்திலேயே வயிறு வீங்கியதோடு கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாவோயாங் மருத்துவமனைக்கு அந்த இளைஞரை அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது குடலில் அசாதாரண வாயு இருப்பது சிடி ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த இளைஞர் கோகோ-கோலா அதிகமாக குடித்ததால் கல்லீரலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த இளைஞருடைய பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவர்கள் அந்த இளைஞர் குளிர்பானத்தை அதிக அளவில் குடித்ததால் வாயு அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |