அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link
அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், இசையின் வேகத்திற்கு ஏற்ப தொடர்ந்து அதிக வேகத்தில் சுழல்கிறார். அவர் சுழன்று ஆடும் வேகம் பார்ப்பவர்களை வியப்படைய செய்கிறது. இந்த வீடியோவை தற்போது லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.