சேலம் மாவட்டத்தில் ரோந்து பனியின் போது சாராயம் விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள சீலாவரி ஏரி மற்றும் கொம்பேரிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்றுக்கொண்டிருந்த சிலம்பரசன், சரவணன், கணபதி, செந்தில் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து 42 சாராய பாக்கெட்டுள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல் துறையினர் சாராயம் விற்றதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.