Categories
தேசிய செய்திகள்

“பாலியல் கொடுமை” இளம் பெண் மரணம்….. கொரோனா ISOLATION வார்டினுள் நிகழ்ந்த கொடூரம்….!!

கொரோனா தொற்று அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் பாலியல் கொடுமைக்கு உட்பட்டு   மரணமடைந்துள்ளார்.

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் இரண்டு மாத சிசுவை கருக்கலைப்பு செய்து விட்டு தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் அதிக ரத்தப் போக்கின் காரணமாக அனுராக் நரேன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட இவருக்கு கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கொரோனா தொற்று இல்லை என உறுதியாகி வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் வீடு திரும்பிய அவர் திடீரென அதிக ரத்தப் போக்கின் காரணமாக கடந்த 6ஆம் தேதி மரணமடைந்துள்ளார். இது குறித்து பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக புகாரின் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் மருத்துவமனையில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து மருத்துவ சீருடையுடன் சந்தேகப்படும்படியாக இருவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து வெளியேற அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |