Categories
உலக செய்திகள்

42 வயது நபரை காதலிக்கும் 19 வயது பெண்…. விமர்சிப்பவர்களுக்கு கொடுத்த பதிலடி…!!!

பிரிட்டனில் 19 வயதுடைய இளம்பெண் 42 வயதுடைய நபரை காதலிக்கும் நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிரிட்டனில் வசிக்கும் கோர்ட்னி லூயிஸ் மெக்வே என்ற 19 வயதுடைய இளம் பெண், 42 வயதுடைய ஒரு நபரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இவர்களை பார்ப்பவர்கள் கடுமையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கோர்ட்னி லூயிஸ் மெக்வே தெரிவித்ததாவது, நீங்கள் சட்டபூர்வமான வயது உடையவராக இருக்கும் பட்சத்தில் எந்த வயதை சேர்ந்தவரையும் காதலிக்கலாம். அதற்கு தடை கிடையாது.

என்னை விட அதிக வயது கொண்டவருடன் உறவை ஏற்படுத்திக் கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை. அது இயற்கையாகவே நிகழ்ந்திருக்கிறது. இதனை வெறுப்பவர்களையும்,  என் காதலரை பார்த்து எனக்கு தந்தை என்று கேலி செய்பவர்களையும் குறித்து நான் கவலை கொள்ளவில்லை. அவர் என் அப்பா கிடையாது, என் வருங்கால கணவர் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |