ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒரே சமயத்தில் 30 சுவிங்கம்மை வாயில் போட்டு பெரிதாக முட்டை விட்டு மாதந்தோறும் 67 ஆயிரம் சம்பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் வசிக்கும் 30 வயதுடைய ஜூலியா ஃபார்ட் ஒரே சமயத்தில் சுமார் 30 சுவிங்கம்களை வாயில் போட்டு மெல்வாராம். அதன் பிறகு தன் தலையை காட்டிலும் மிகவும் பெரிதான bubble-ஐ விடுவாராம். அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தன் இணையதள பக்கங்களில் வெளியிட்டு வந்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இவருக்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது. இதன் மூலம், 67 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் பகுதிநேர வருமானமாக பெற்று வருகிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, என் நண்பர் ஊக்குவித்ததன் மூலம் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட தொடங்கினேன்.
அதன் பிறகு இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. எனவே இதை வழக்கமாக செய்து கொண்டிருந்தேன். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை பின்தொடர்பவர்கள் அதிக வரவேற்பு அளித்ததால் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது என்று கூறியிருக்கிறார். மார்க்கெட்டிங் பணியில் இருக்கும் இவர் பகுதி நேர வேலையாக இதனை செய்துகொண்டிருக்கிறார். இவர் சிவில் இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்சரில் பட்டம் பெற்றவர்.