உத்திரபிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம் எல் ஏ ஹாஜி இக்பால் என்பவருக்கு அப்சல், ஜாவித் மற்றும் அலிசான் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.இதனிடையே தனது உறவுக்கார பெண்ணுக்கு விசா பூர் பகுதியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் சீட் பெற்று தரும்படி டெல்லியை சேர்ந்த பெண் ஷாபின் என்ற நபர் மூலம் முன்னால் எம்எல்ஏ ஹாஜி இப்பாலை அனுப்பியுள்ளார்.பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணையும் உறவுக்கார பெண்ணையும் மிசாபூருக்கு அழைத்தனர்.
அதனை நம்பி பெண்கள் இருவரும் ஷாபியுடன் சேர்ந்து மிசாபூருக்கு சென்றனர். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் எம்எல்ஏ மகன்கள் மூன்று பேரும் ஷாபியுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள நான்கு பேரை தேடி வருகிறார்கள்.