அமெரிக்காவில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் 68 வயது முதியவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த கொன்னி காட்டன் என்ற 24 வயதுடைய இளம் பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 68 வயதுடைய ஹெர்ப் டைகர்சன் என்ற முதியவரை சந்தித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இருவரும் நண்பர்களாகினர். நாளடைவில் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்ற தொடங்கினார்கள்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த இளம்பெண் முதியவரை பணத்திற்காக தான் காதலிக்கிறார் என்று பலர் கூறுகிறார்கள். இது பற்றி அந்த பெண் தெரிவித்ததாவது, நாங்கள் உயிருக்கு உயிராக காதலித்து கொண்டிருக்கிறோம்.
இது பலருக்கு அதிர்ச்சியை தந்தது. நான் அவரை பணத்திற்காக தான் காதலிக்கிறேன் என்று பலரும் கூறினார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. என் குடும்பத்தினரும் முதலில் இதை கேட்டு அதிர்ந்து போனார்கள். ஆனால் அதன்பிறகு ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் அவர் என்னை அளவு கடந்து நேசிப்பதையும், சந்தோஷப்படுத்துவதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்.
இது பற்றி ஹெர்ப் டைகர்சன் தெரிவித்ததாவது, பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் என்னுடன் இருப்பதாக கூறினார்கள். கொரோனா கால கட்டத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். எங்களின் குடும்பத்தாரும் புரிந்துகொண்டார்கள். நாங்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தினர். இது குடும்பத்தினருக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது. ஆனாலும் நான் அவருடன் சேர்ந்து இருப்பதை தான் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.