மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எடுத்த காரியங்களில் எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். செய்வதை சீராக செய்தால் வெற்றி உறுதி என்பது உங்களுக்கு தெரியும். துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். அதே போல் கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்.
கடன் விவகாரங்கள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் , சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனம் இருக்கட்டும். நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். ஆகையால் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது சிறப்பை கொடுக்கும். கூடுமான வரை பொறுமையை மட்டும் இன்று கையாளுங்கள். மாணவர்கள் கல்வியில் நிதானமாக செயல்படுங்கள். சக மாணவர்களிடம் ஒற்றுமையைப் பேணவேண்டும். கூடுமானவரை ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்று சித்தர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு இன்று சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்