தடுப்பூசிகளை மறுப்பவர்கள் துரதிஷ்டவாதிகள் என்று வேல்ஸ் இளவரசர் சார்லஸ் கூறியுள்ளார்.
கொரோனாவை எதிர்த்து போராடி தங்களது கடமையை முழுமையாக செய்த சுகாதாரப் பணியாளர்களை கண்டு தான் விழுந்ததாக வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தடுப்பூசி பாதுகாப்பு குறித்த தெரிவித்ததாவது, “பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்பு பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது மிகவும் சோகமான விஷயமாகும்.
இப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் உள்ள மாறுபாடுகள் என்னை மேலும் வருத்தமடைய செய்கிறது. தடுப்பூசி மறுப்பவர்கள் அதன் நன்மையை அனுபவிக்காத துரதிஷ்டவாதிகளாகவே நான் எண்ணுகிறேன். தடுப்பூசி உயிர்களை காப்பாற்றி கடுமையான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். நான் மிகவும் நேசிக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கு தடுப்பூசி செலுத்துபவர்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.