Categories
தேசிய செய்திகள்

யூட்யூபில் ஆபாச படம்… பெண்களின் பரிதாப நிலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

 யூடியூபில் ஆபாச படங்களில் நடிக்க வைக்கப்பட்ட பெண்களை உரிமையாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியை சேர்ந்தவர்களான  முகேஷ் குப்தா(29,) ஜிதேந்திரா குப்தா(25),  குமார் சவ்  (24) இவர்கள் மூவரும் சேர்ந்து குர்ரார்ஹாட்டில் சுமார் 17 யூடியூப் சேனல்களையும் மற்றும் பல ஃபேஸ்புக் முகவரியையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களால் நடத்தப்படும் யூடியூப் சேனல்களை  20 மில்லியனுக்கும் மேல் சந்தாதாரர்கள் பயன்படுத்துகிறார்கள். தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்துவதற்காகவும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை படமாக்கி அவர்கள் சேனலில் வெளியிட்டுள்ளனர்.

இதனால் அவர்கள்  மூவருக்கும் கிடைத்த வருமானம் இதுவரை கிட்டத்தட்ட 2 கோடி தொட்டுள்ளது. மேலும் இவர்கள் எடுக்கும் ஆபாச வீடியோகளுக்கு  தேர்ந்தெடுக்கப்படுவார்கள் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகலேயாகும் .அவர்களுக்கு பண ஆசையை மூட்டி  யூடியூப் சேனலில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள  கொள்ள வைக்கிறார்கள். பிறகு அவர்களின் அந்தரங்க பாகங்களை தொட்டும் ஆபாச வார்த்தைகளை பேச வைத்தும் வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன.

அது மட்டுமின்றி ஆபாச வீடியோக்கள் எடுப்பதற்காக நடிக்க வந்த ஐந்து பெண்களையும் யூடியூப் சேனல் உரிமையாளர்களான இந்த 3 பேரும்  பாலியல் பலாத்காரம் செய்யதுள்ளனர் . இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 பெண்களும் காவல் துறையிடம் இவர்கள் மூவரும் செய்த சதிச் செயலை கூறி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வைத்தனர். போலீசார் மூவரையும் மிகக்கடுமையாக விசாரித்தபோது இவர்கள் மூவரும் யூடியூப் மூலம் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி அனைத்து தரப்பிலும் பிராங்க் வீடியோக்கள் என்ற பெயரிலும் ஆபாச படங்களை வெளியிட்டுள்ளனர் என தெரியவந்தது .

இவர்கள் மூவரும் பெண்களை காட்சிப் பொருளாக்கி பணம் சம்பாதித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் போலீஸ் விசாரணையில் இந்த யூடியூப் சேனல் உரிமையாளரிடமிருந்து ஐந்து லேப்டாப் மற்றும் நான்கு விலை உயர்ந்த செல்போன்கள்  கைப்பற்றப்பட்டது. அவை அனைத்திலும்  பெண்களை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களின் காட்சிகள்  நிரம்பியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |