தைராய்டு என்பது நமது உடலின் கழுத்துப் பகுதியில் ஏற்படும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சினை ஏற்படும். இந்த தைராய்டு நோயால் அதிக அளவில் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி முகம் பருமனாகிவிடும். இதற்க்கு முக்கிய காரணம் உடலில் சுரக்கும் அயோடின் தான்.
இவற்றின் ஏற்ற இறக்கமே இந்த நோய்க்கு முக்கிய காரணம். நாம் உண்ணும் உணவின் மூலம் அவற்றை சரி செய்ய முடியும். தைராய்டு சுரப்பியை சரி செய்ய முக்கியமாக அயோடின் மற்றும் செலினியம் அவசியம். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 4 முதல் 5 கிராம் வரை உப்பை எடுத்துக் கொள்ளவேண்டும். அதிகளவு பாதிப்பு ஏற்படும் போது அதிமதுரம், அக்ரகாரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும் உடலில் சோர்வு வரும்போது நல்ல பலன் கிடைக்கும். அகில் கட்டை பொடியை சேர்த்து நெருப்பில் தூவி அதன் புகையை உணரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.