பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், கொரோனா காலகட்டத்திலும் சரி, இப்பவும் சரி மக்களுக்காக நான் நிறைய செஞ்சுட்டு வந்துட்டு இருக்கேன். உதவி செய்யும் அந்த பழக்கம் என்னுடைய குடும்பத்துக்கும் இருக்கு. முன்பு டான்ஸ்ஸருக்கு நிறைய பண்ணிட்டு இருந்தோம். இன்னைக்கு பப்ளிக்கு நிறைய பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன்.
வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில பிரிவில் நான் தலைவரா இருந்த போது, கிட்டத்தட்ட 28 பேருக்கு மேல வெளிநாட்டிலிருந்த தமிழர்களை மீட்டு கொண்டு வந்து இருக்கேன். மியான்மர், கம்போடியா, துபாயில் இருந்து நிறைய நபர்களை மீட்டு கொண்டு வந்திருக்கேன். இந்த மாதிரி விஷயங்கள் ஏகப்பட்ட முறை என்னோட சொந்த செலவில் நிறைய செஞ்சுட்டு வந்துட்டு இருக்கேன். இப்படி இருக்கும்போது நான் பாஜகவுக்கு கலங்கத்தை கொண்டு வந்தேன் என்று சொல்றது ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது.
செல்வகுமார் என்ற ஒரு நபர். கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த ஒருத்தர். வந்த உடனே ஒரு பெரிய பொறுப்பு வாங்கி, இன்னைக்கு அவர் எனக்கு எதிராககொச்சையான ட்விட்டருக்கு லைக் போட்டுட்டு இருக்கும்போது, அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.
கட்சியில் எனக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கல. டைம் கொடுக்குறதுக்கு முன்னாடியே என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த மனநிலையில் இருந்து நான் வெளியே வரவேண்டும். கட்சியில் போய் பேசுறதுக்கு எனக்கு டைம் கொடுக்கணும். நான் எனது விளக்கத்தை கொடுக்க தயாராகிக்கொண்டு இருந்தேன். அதற்கும், விசாரணை வைக்காமல், நோட்டீஸ் எதுவும் இல்லாமல் என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க என வேதனை தெரிவித்தார்.