Categories
சினிமா தமிழ் சினிமா

நீ அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வேண்டும்…. ரசிகரின் பாடல் வீடியோவை வெளியிட்ட டி.ஆர் வாழ்த்து…!!

“உதிர்” பட பாடல் வரி வீடியோவை டி ராஜேந்திரன் நேற்று வெளியிட்டார்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரபலமான டி ராஜேந்திரனின் தீவிர ரசிகர் மட்டுமின்றி அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஞான ஆரோக்கிய ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் “உதிர்”. இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள், தயாரிப்பு என அனைத்தையும் ஞான ஆரோக்கிய ராஜா செய்திருக்கிறார்.

இவர் தனது குருவான டி ராஜேந்திரானை போலவே நல்ல பாடல்களை எழுதி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவர். இப்படத்திற்கு அரவிந்த் ஸ்ரீராம் மற்றும் ஈஸ்வர் ஆனந்த் இசையமைத்துள்ளனர். மேலும் இப்படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

உதிர் பட பாடலை டி.ராஜேந்தர் வெளியிட்டபோது எடுத்த புகைப்படம்

இந்நிலையில் வெளியான பாடல் வரிகளின் வீடியோவை டி ராஜேந்தர் நேற்று வெளியிட்டார். அதோடு படக்குழுவினருக்கு டி ராஜேந்தர் பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, உதிர் படத்தின் பாடல்வரிகளின் வீடியோவை வெளியிட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பாடலைக் கேட்கும்போதே உதிர் படம் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று தெரிகிறது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் உயிரோடு நிச்சயம் கலக்கும். மேலும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமாகியுள்ள ஞான ஆரோக்கிய ராஜா அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வெற்றிகளைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |