தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் நடித்திருந்த கணம் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் சதீஷ் சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சதீஷின் மகள் நிஹாரிகாவுக்கு தற்போது 2 வயது நிரம்பியுள்ளது. இந்த தகவலை நடிகர் சதீஷ் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.