Categories
அரசியல் மாநில செய்திகள்

“போட்டியிட்டு ஜெயிக்க முடியல” அதுக்கு தகுதி இருக்கா….? பேச்சு மட்டும் தான் அதிகம்…. DJ-வை வெளுத்து வாங்கிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…..!!!!!

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் 2 நாட்களாக அதிகமாக பேசி வருகிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு கேபி முனுசாமி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். 6 ஆண்டுகால ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்களுடைய சுயநலத்திற்காக தூக்கி எறிந்தீர்களே இது நியாயமா? அந்தப் பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் கூட 6 ஆண்டுகள் பதவியில் இருந்திருப்பார் அல்லவா? தங்கமணி மற்றும் வேலுமணி அமைச்சராக இருந்தபோது கீழ்பாக்கம் வீட்டில் ஓபிஎஸ்-க்கு எதிராக என்ன சதி திட்டம் தீட்டினார்கள் என்பதை கூற முடியுமா?

ஓபிஎஸ் இடம் நீங்கள்தான் முதலமைச்சராக  வேண்டும் என்று கூறிவிட்டு அதன் பின் இபிஎஸ்-ஐ வேட்பாளராக அறிவித்தீர்களே இந்த துரோகத்திற்கு பெயர் என்ன? தர்மயுத்தம் நடைபெற்ற காலத்தில் நீங்கள் நல்லவர் போல் நடித்து ஓபிஎஸ் இடம் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை வாங்கிக் கொண்டு பின் அவருக்கே துரோகம் செய்தீர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அதன் பிறகு மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் கே.பி முனுசாமி பதில் அளிக்க வேண்டும். இதேபோன்று தொடர்ந்து பல விஷயங்களை கூறினால் கேபி முனுசாமியின் வீடு முற்றுகை இடப்படும்.

இதனையடுத்து செய்தியாளர் ஒருவர் சட்டசபையில் ஓபிஎஸ்-க்கு இடம் இல்லை என்றும், சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கு வேறு இடம் ஒதுக்குங்கள் என்று ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலை உயர் நீதிமன்றம் சொல்லும். ராயபுரத்தில் போட்டியிட்டு ஜெயக்குமாரால் ஜெயிக்க முடியவில்லை. ஓபிஎஸ்-க்கு இடம் இருக்கிறதா என்று கேட்கும் ஜெயக்குமாருக்கு முதலில் சட்டமன்றத்தில் நுழைய தகுதி இருக்கிறதா? அதிமுக கட்சியின் 51-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஓபிஎஸ் நாளை காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவார்.

அதிமுகவில் பதவிக்காக தொண்டர்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவுக்கு ராஜ கண்ணப்பன் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி எல்லோரும் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். இவர்களை கண்டிப்பாக விட்டிருக்கக் கூடாது. இவர்கள் அதிமுக கட்சியை விட்டுப் போனதற்கு காரணம் அதிமுகவில் 10 பேர் மட்டுமே பலம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தது தான். மேலும் அதிமுக ஒன்று சேர்ந்தால் முதலில் ஜெயக்குமார் தான் ஓபிஎஸ் காலில் விழுவார் என்றார்.

Categories

Tech |