செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத் தேர்தல் வரும்போது அவரது மாவட்டத்தில் ஓபிஎஸ் மட்டும்தான் வெற்றி பெற்றார். அவருடைய மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வர முடியாத ஒருங்கிணைப்பாளர் என்றால் இவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உடையவர் என்பதை பொதுமக்கள் புரிஞ்சிக்கணும்.
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்குது. பட்டாசு வெடிக்குறாங்க. ஒரு மாவட்டத்துல 10 பேர், 15 பேர் தான் பட்டாசு வெடிக்குறாங்க. அவ்வளவு தான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருக்காங்க. பண்ணை வீட்ல கூட்டம் நடத்துறாரு, மொத்தமே 50 பேரு தான். அப்படியா இருக்கு ? இன்னைக்கு கட்சி. எடப்பாடியார் மாவட்டத்துக்கு போறாரு எவ்வளவு எழுச்சி இருக்கு ?
எல்லாரும் கண்கூடா டிவில பாருங்க, நியூஸ் பாருங்க எவ்வளவு எழுச்சி இருக்குன்னு. உண்மையை மறைத்து விட முடியாது. ஒரு தொண்டர்கள் செல்வாக்கு இல்ல, நிர்வாகி செல்வாக்கு இல்ல, யாருடைய செல்வாக்கும் இல்லாமல், பொதுமக்கள் ஆதரவும் இல்லாமல் ஊடகங்களை நம்பி இருக்கின்றார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நம்பி தான் அவர் அரசியல் பண்ணுறாரு தவிர, தொண்டர்களை நம்பி, மக்களை நம்பி அவரு அரசியல் பண்ணல. ஆனால் அவர பொறுத்தவரை பாத்தீங்கன்னா ஒட்டுமொத்தமாக ஒரு துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர், அப்படின்னு சொன்னா முதலில் வருபவர் ஓபிஎஸ் மட்டும் தான் என கடுமையாக ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தார்.