Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம சாப்பிட முடியாது…. வடமாநில தமிழர்களுக்கு….. திண்டுக்கல் விவசாயிகள் அனுப்பி வைத்த 1 டன் பரிசு…!!

வெங்காய விலை குறைந்ததையடுத்து டெல்லியில் வாழும் தமிழர்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து 1 டன் வெங்காய மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பிறந்து அதனுடைய பண்பாடு கலாச்சாரத்தை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதனை மறுமுறை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு படித்து விட்டு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் தமிழர்களின் பண்பாட்டையும் குறிப்பாக தமிழர்களின் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளவே முடியாது.

அந்த வகையில் தமிழர்களின் சமையலில் முக்கிய பங்காற்றுவது சின்னவெங்காயம். ஆனால் வட மாநிலங்களில் வசிக்கும் மக்கள் பல்லாரி வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்துவர். இதனால் அப்பகுதிகளில் சின்னவெங்காயம் கிடைப்பதே மிக அரிது என்பதால் தமிழர்கள் தமிழக உணவு முறையை சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் தமிழர்களுக்காக தமிழகத்தில் இருந்து வெங்காயம் டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு வாரம்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் வெங்காயம் அதிகம் விளைச்சல் ஆகும் திண்டுக்கல் பகுதியில் இருந்து டெல்லிக்கு வாரம் தோறும் சுமார் ஒரு டன் அளவிற்கு வெங்காயம் முட்டை ஏற்றுமதி செய்யப்படும்.

அதேபோல் தமிழர்கள் வாழையிலையில் விரும்பி சாப்பிடுவர். ஆகையால் வாழை இலையும் அதே மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு ஏற்றுமதி செய்து அனுப்பி வைக்கப்படும். அதேபோல் இலங்கை மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வெங்காய விலை குறைந்ததால் குறைந்தளவிலேயே டெல்லிக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது வெங்காய விளைச்சல் அதிகரித்து விலை கணிசமாக குறைந்ததால் மீண்டும் ஒரு டன் அளவிற்கு வெங்காய மூட்டைகள் டெல்லிக்கு நேற்றையதினம் அனுப்பப்பட்டது. 

Categories

Tech |