Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை கண்டு பயந்துட்டீங்க… பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார்… கெத்தாக ட்விட் போட்ட குஷ்பு …!!

ஒவ்வொரு மகள்களுக்காக மோடி நடவடிக்கை எடுப்பார் என நடிகை குஷ்பூ ட்விட் செய்துள்ளார்.

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். பாஜக மகளிரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்படபட்டு இருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதனால் சிதம்பரத்தில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. மேலும் நடிகை குஷ்பு கடலூர் மாவட்ட எல்லையில் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், இறுதிவரை பெண்களின் கண்ணியத்திற்காக போராடுவோம் என தெரிவித்தார். எங்கள் ஆற்றலைக் கண்டு பயந்து அவர்கள் எங்களை கைது செய்துள்ளனர். நாங்கள் தலை வணங்க மாட்டோம். நாட்டின் ஒவ்வொரு மகள்களுக்காக மோடி நடவடிக்கை எடுப்பார் என குஷ்பூ ட்விட் செய்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Categories

Tech |