தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவினரை போலீஸ் கைது செய்தது. எடப்பாடியை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக சட்டப்பேரவை ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இதனை கண்டித்து இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்க்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.
ஜனநாயகத்தில் ஒரு உண்ணாவிரதம் இருப்பதற்கு கூட ஏன் மறுக்க வேண்டும் ? இதே ஆளுங்கட்சி இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்துக்கு நீங்கள் ஆர்ப்பாட்டம் பண்றீங்க. அதே போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளுக்கும் அந்த உரிமை வேண்டும் அல்லவா. அந்த வகையில் அண்ணா திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்படக்கூடிய அநீதியை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதையும் மீறி அவர்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டம் வெற்றி பெறும். எதிர்க்கட்சியின் உடைய எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்கள் மெஜாரிட்டி ஆகிறார்கள். எனவே அவர்கள் யாரை துணை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவருக்கு அனுமதி வழங்க வேண்டும். இது அவர்களுடைய உரிமை. அந்த உரிமையை சட்டமன்றம் பறிக்கக் கூடாது என தெரிவித்தார்.