Categories
அரசியல் மாநில செய்திகள்

நடை பயணத்தை கேலி செய்யுறீங்க… ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்… பாஜகவுக்கு ”பா.சி” நச்சுன்னு பதிலடி …!!

இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி ”கன்னியாகுமரி முதல் காஷ்மீர்” வரை நடைபயணம் மேற்கொள்கின்றார். இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், இந்தியாவை இணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இந்தியாவை பிணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்,  இந்தியாவை சின்னாபின்னமாக ஆக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

சுதந்திர போராட்டத்தில் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை வரலாறு சொல்லும். அதைப்போல இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திலும் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் பங்கு பெறவில்லை என்பதற்காக, நாங்கள் பின்வாங்க போவதில்லை. படிப்படியாக கோடிக்கணக்கான மக்களை இணைத்து,

அன்று  வெள்ளையனே வெளியேறு என்று எப்படி சொன்னமோ,  அதைப்போல இன்றைக்கு,  இந்தியாவை பிளவுபடுத்தும் சக்திகளை வெளியேற்றும் வரை எங்களுடைய பயணம் முடியாது. நம்முடைய முயற்சி நிற்காது என்பதை சொல்ல விரும்புகிறேன். இன்றைய இளைஞர்களுக்கு சொல்லுகிறேன். நாங்கள் செல்வதை நீங்கள் கேலி செய்தாலும்,  பாரதி சொல்வதையாவது கேளுங்கள்.  பாரதி என்ன சொன்னார் ? ஒளி படைத்த கண்ணினாய் வா வா,

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா,  கழிப்படைத்த மொழியினாய் வா வா,  கடுமை கொண்ட தோழினாய் வா வா,  இளைய பாரதத்தினாய் வா வா வா,  எதிரில்லா வளர்த்தினாய் வா வா வா, வெற்றி கொண்ட கையினாய் வா வா வா,  பிணையம் கொண்ட நாவினாய் வா வா வா, ஒற்றுமைக்கும் உய்யதே நாடெல்லாம் ஒரு பெரும் செயல் செய்வாய் வா, வா வா. இந்த நாடு ஒற்றுமைக்குள் ஒய்ய  வேண்டும் என்ற அந்த மந்திர சொல்லை புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கும் வரை ”இந்தியாவை ஒற்றுமை படுத்துவோம்” இந்திய மக்களை ”இணைப்போம்”  இந்திய மக்களை ”பிணைப்போம்” என தெரிவித்தார்.

Categories

Tech |