செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலே ஒற்றுமைக்கு வித்திட்டு, அழைப்பு விடுக்கிறார். அடுத்தது இது என்ன பண்பாடு என்று பாருங்கள், இதைக் கூட வேண்டாம் என்று விட்டு விடுவோம். அண்ணன் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.டி.சி பிரபாகரனும், நானும் எல்லாரும் உட்கார்ந்து பேசும் போது, அவரை தரை குறைவாக பேசுவதையும்,
தேவையில்லாமல் ஓபிஎஸ் அவர்களது புதல்வர்.. ஒரே ஒரு எம்பி.. நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் காரணம் அவரையும் இழிவாக பேசுவது, பதவி வெறி பிடித்தவர் என்று சொல்வது, இந்த சட்ட திட்டமே தெரியாமல் பழனிச்சாமி இருந்திருக்காரு என்று தான் எனக்கு வருத்தம். நான் அதை விளக்கி கூறனும், பழனிசாமி கூப்பிட்டால் நான் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன். பழனிசாமி பழனிசாமி, நீங்க எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க.
கழக சட்டதிட்ட விதிகள், உங்களை அருகில் இருந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், உங்களுக்கு எந்த அளவிற்கு அறிவு என்று எனக்கு தெரியும், உங்களுக்கும் அது புரியும். இங்கு இருக்கிறது.. நான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன், இன்று கோர்ட் சொல்லிட்டு. கழக சட்டதிட்ட விதிகளின்படி 43 பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும் திருத்தப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களுடைய பதவி காலம் ஐந்து வருடம் என்ற விதியை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியது அல்ல என தெரிவித்தார்.