ஆசிய அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மருத்துவக் கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் வைஷாலி என்ற மாணவி இயற்கை மருத்துவக் கல்லூரியில் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார். இவர் யோகாசனம் செய்வதில் திறமை வாய்ந்தவர் ஆவார். தற்போது இணைய வழியில் 9 – வது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வைஷாலி அந்த போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்து கொண்டு வைஷாலி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் வைஷாலி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வைஷாலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.