Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தீய பழக்கங்களை விரட்டி அடிக்க.. யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களை விரட்டி அடிக்க செய்கிறது யோகா..

யோகா, மன உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. யோகா, உடலையும், மனதையும் சமநிலைக்குக் கொண்டுவரும். இதனால் நாம் பழக்கமாக மேற்கொள்ளும் பல கெட்ட பழக்கங்களை எளிதில் விட முடியும்.

கோபம், எரிச்சல், மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றை யோகா மூலம் நன்கு கையாள முடிவதால், அமைதிப்படுத்த வெளிப்புற வஸ்துக்கள் தேவை என்ற தோற்றம் தவிர்க்கப்படுகிறது.

புகை பிடிப்பதை விட்டவர்களுக்கு, அதன் பின், எடை அதிகரித்தல், மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவை வர வாய்ப்புள்ளது. யோகாவின் மூலம் அதை தவிர்க்கலாம் குறைக்கலாம்.

புகைப் பழக்கத்தை விட்ட பின் புகைக்கான ஏங்குதலே  அவர்களை பெரும்பாலும் இப்பழக்கத்துக்கு மீண்டும், மீண்டும் அடிமையாக்கி அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீளாமல் இருக்க செய்கிறது. யோகா இந்த ஏக்கத்தை வெகுவாகக் குறைத்து, இந்த சுழற்சியில் இருந்து ஒருவரை மீட்கிறது.

யோகா நமது செயல்களிலும், நடவடிக்கைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் தன்னிச்சையாகச் செய்யும் பல செயல்கள் குறைகின்றன. அதில் புகை பிடித்தலும் அடங்கும்.

யோகா நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக இருக்கச் செய்வதால், வெளியிலிருந்து உற்சாகம் தரும் பொருள்களுக்கான தேவை என்ற தோற்றம் போய்விடுகிறது. புகைபிடிப்பதால் நுரையீரல்களில் வரும் பாதிப்புகளைச் சரிசெய்யவும் யோகா பெரிதும் உதவுகிறது.

Categories

Tech |