செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி,ஓபிஎஸ் அண்ணன் ஒற்றுமையுடன் இருக்க அனைவரையும் அழைத்தார். நீங்கள் சொன்னது போல, அதை சர்வாதிகாரப் போக்கில் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார். இதை தொண்டர்களும், நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொண்டன் முதல்வர் ஆவான், தொண்டன் தலைவன் ஆவான், அப்படி என்றால் பழனிச்சாமி நீ விட்டுடு, வெளியில் வந்துரு. ஒரே ஒரு ஆளை நியமனம் பண்ணு, ஏத்துக்கிறோம். பதவி வெறியினுடைய மறு உருவம் தான், அம்மா வகித்த பொதுச் செயலாளர் பதவியை வகிக்க துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.
2008இல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு போக வேண்டும் என்று இரண்டு பேரும் முடிவு செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனு போட்டீங்களே, ஆதாரத்தோடு கொண்டு வரட்டுமா வெளியே நானு..வெளியே திமுகவுக்கு சப்போர்ட் பண்ணுறோம்னு எங்களை சொல்லுறீங்க.
ரவீந்திரநாத் போய் பார்த்துட்டாரு, ரொம்ப அசிங்கமாய் போச்சாம். யோவ் அம்மாவே பார்த்தாங்க ஐயா..அம்மாவே கூப்பிட்டு ”மிஸ்டர் ஸ்டாலின்” வந்து பார்த்தாரு. அவங்களே வரவேற்று, பார்த்து பேசுனாங்க. என்ன ஒரே ஒரு எம்பி தான் இருக்காங்க தமிழ்நாட்டுல.
துறைகள், மற்றவர்களை முதலமைச்சரை பார்த்தால் என்ன தப்பு ? கட்சியில அடிச்சுக்காதீங்க, வேண்டாம் அதை விட்டுட்டு, தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையா போங்க, அப்பதான் நீங்க திமுகவை எதிர் கொள்ள முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தை பிரிந்து இருந்து எப்படி எதிர்கொள்ள முடியும் ? என தெரிவித்தார்.