நீங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கு இந்த ஐந்து குணம் தேவை இந்த பதிவில் என்னவென்று பார்க்கலாம்.
இந்த உணர்வுகள் அல்லது குணநலன்களில் ஏதாவது உங்களுக்கு இருக்கு அப்படி என்றால் கட்டாயமாக உங்களுடைய எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்னாடியே தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணிப்பது என்று கூறுவதை விட, அவற்றை அறிந்து கொள்வதென்பதுதான் இந்த இடத்தில் சரியாக இருக்கும். கணிப்பது என்பது வேறு ஆக அமையும். பழைய அனுபவங்களிலிருந்து நாம் சில சரியான முடிவுகளை எப்பொழுதுமே நிகழ்காலத்தில் எடுப்போம்.
அதையெல்லாம் நீங்கள் எதிர்காலம் என்று சொல்ல முடியுமா.? சொல்ல முடியாது. ஒரு சில குணநலன்கள் இருந்தால் மட்டுமே அந்த எதிர்காலத்தை கணிக்க கூடிய உணர்வுகள் இருக்கும்.
பிராணிகளிடம் அன்பு செலுத்துதல்:
பெரும்பாலும் அதிகமாக வீட்டில் வளர்க்கக்கூடிய நாய், பூனைகளிடம் ஒரு அதீத பாசம் யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களை கவனித்து பாருங்கள் அவர்களுக்கு ஒரு சில காலகட்டங்களில் அதீத அன்பு காரணமாக மற்ற உயிரினங்களோடு தொடர்பு கொள்ள கூடிய அளவிற்கு நீங்கள் சொல்லாமலே அந்த உயிரினங்கள் கேட்கக்கூடிய அந்த ஆற்றல்களை எல்லாம் அவர்களுக்கு உண்டாகும். அதேபோல் அந்த உயிரினங்கள் பசி எடுக்கிறது அல்லது என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் புரிந்து கொள்வார்கள். அந்த உள்ளுணர்வு பரிமாற்றம் என்பது இவர்களது எதிர்காலத்தை சரியாக தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலும் உண்டாகும.
ஆழ்ந்து சிந்திப்பவர்கள்:
ஒரு காரியத்தை எடுத்ததுமே சட்டென்று முடிவு பண்ணவே மாட்டாங்க. மாறாக ரொம்ப யோசிப்பாங்க. இதனால் நமக்கு என்ன கிடைக்கும் அப்படிங்கிற ஒரு விஷயம். அதே போல சில விஷியங்கள் இது தற்செயலாக நடந்து இருக்கிறது, விதியின் காரணமாக என்ன நடந்து இருக்கும் என்பதையும் ரொம்ப தெளிவாக யோசிப்பார்கள்.
எதேச்சையாக நடந்த விஷயங்கள் இது எல்லாத்தையும் அவர்களுக்கு பிரித்துப்பார்க்க தெரியும். ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு இப்படி ஆழ்ந்த சிந்தனையில் போகிறார்கள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அந்த உணர்வுகளை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். இது இயற்கையாகவே அமைந்திருக்கும்.
தனிமை விரும்பிகள்:
என்று சொல்லக் கூடியவர்கள், எப்போதுமே யாருடனும் சேரமாட்டார்கள் தனியாகவே இருப்பார்கள். அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி விடுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் திருப்பி திருப்பி பார்ப்பார்கள். இது செய்தால் இது செய்ய முடியும் அப்படி என்கிற மாதிரியான அந்த ஆற்றல்கள் அல்லது அந்த எண்ணங்கள் எப்பொழுதுமே அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.
அப்பொழுது பார்த்தீர்கள் என்றால் மற்றவர்களின் தலையீடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடாது என்று யோசிப்பார்கள். அவர்கள் அப்படி இருக்கும் பொழுது எதிர்காலத்தில் தனக்கு என்ன நடக்கும் என்பதையும் முன்னரே தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் சில தனிமை விரும்பிகளுக்கும் இருக்கும்.
ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால் அது ஏன் ஏற்படுகிறது என்பதையும் சிலபேர் தெளிவாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்கான காரணம் என்ன என்றால், என்ன ஏன் இந்த நேரத்தில் எல்லோரும் சிரிக்கிறார்கள், பொதுவான சில அறிகுறிகள் அல்லது அந்த ஃபீலிங்ஸ் உணரக்கூடிய ஆற்றல் சில பேருக்கு இருக்கிறது. அந்த உணர்தல் ஒருவரின் கண்ணில் தண்ணி வந்தது என்றால் ஒன்று சோகத்தில் வரலாம் அல்லது ஆனந்த கண்ணீராக வரலாம்.
அவர்களின் கண்களில் கண்ணீர் வருவது முகத்தோடு ஏமோஷனல் பார்த்து சிலர் கண்டுபிடிப்பார்கள். சந்தோஷமா இருக்கிறார்களா அல்லது குழப்பத்தில் இருக்கிறார்களா என்று கண்டிபிடித்துவிடுவார்கள். இந்த பண்பு சில பேருக்கு மட்டும்தான் இருக்கும். அப்படி அந்தப் குணம் ஒருவருக்கு இருக்கு என்றால் எதிர்காலத்தை உணர கூடிய வாய்ப்புகள் ரொம்பவே அதிகமாக இருக்கும்.
சென்சிட்டிவான பர்சன்:
டக்குன்னு கோவம் வந்துரும், அந்த மாதிரியான நபர்கள் அவர்களுக்கும் இந்த பண்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் ஈஸியா மற்றவர்களுடைய ஃபீலிங்ஸ் புரிஞ்சுபாங்க. நாம் ஏதாவது சொன்னா அங்க ரியாக்ட் பண்ணுவார்கள். அவர்களுடைய காரணமே அதுதான் சென்சிட்டிவான பர்சன். அப்போ அவங்க கிட்ட இத நம்ம செய்யக்கூடாது அப்படிங்கற மாதிரி யோசிப்பாங்க. அவர்கள் ஆழ்ந்த அமைதியைக இருப்பார்கள்.
அமைதியாக இருந்து சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பார்கள். எல்லோரிடமும் அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். சத்தத்தை கேட்பார்கள் எந்த மாதிரியான சென்சிட்டிவ் ஆக இருப்பவர்களுக்கு உரித்தான சில பண்புகள் இருக்கிறது. அதிலிருந்து மாறுபடாமல் நடந்து காட்டுவார்கள்.
அப்படி இருக்கும் பொழுது எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன்னாடியே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் எல்லாமே இருக்கும். அடுத்தவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இந்த மாதிரி எல்லா நலன்களும் ஒருவரிடம் ஒன்று சேர இருக்கும் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து கொள்ளக்கூடிய அந்த வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.
இதைத் தெரிஞ்சுகிட்டு நம்ம என்ன பண்றது ஒன்னும் பண்ண முடியாது, இது சில இடத்தில் பிரச்சினைகள்தான் கொண்டுபோய்விடும். அப்படிங்கிறது சில பேர் சொல்ல கேட்டிருப்போம். ஏன் அப்படிக் கூறுகிறார்கள் கண்டிப்பாக நிகழ்காலத்தில் நாம் சரியாக வாழ்ந்துவிட்டுப் போய் விட்டால் நமக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. கடந்த காலத்தை பற்றி யோசிப்பதும் தப்பு, அதேபோல் வருங்காலத்தில் என்ன நடக்குமோ நடக்காதோ என்ற குழப்பமான மனநிலையில் இருந்தாலும்,
அது நிகழ்கால வாழ்க்கையை எப்பொழுதுமே பிரச்சினைகளாக மாற்றி விடும். என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் இது எதிர்காலத்தில் நடக்கும் என்ற உணர்வு நிகழ்காலத்தில் செய்யக்கூடிய சில தவறுகள் மற்றவர்களுக்கு திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதனால் தான் இந்த உள்ளார்ந்த உணர்தல், உள்ளுணர்வு அதிகப்படியான மதிப்பு கொடுக்கப்படுகிறது. நேர்மறை ஆற்றலின் வரமாகவே கருதப்படுகிறது.