Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார்…! இந்தியாவுக்கே அதான் துருப்பு சீட்டு… மாஸ் காட்டும் திராவிட மாடல் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, கலைஞர் அவ்வளவுதான்,  கலைஞர் போய்விட்டால் இயக்கம் இருக்காது என்று சொன்னான். இயக்கம் இருந்தாலும் கொள்கை இருக்காது என்று சொன்னான். கொள்கை எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள் ? அவர் துண்டு சீட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னார்கள். ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார்கள்.

ஆம் நண்பர்களே..!  அவர் துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான். அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம்,  வாயையும் எல்லாவற்றையும்,  நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், நீங்கள் இந்துக்களுக்கு எதிர் என்பான். நான் உடனே சொல்வேன்.  நாம் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி என்பதால் தான் இந்து கோவில்களில் திருடப்பட்டு வைத்திருந்த 3000 கோடி சொத்தை ஒரே வருடத்தில் எங்கள் அமைச்சர் மீட்டு கொடுத்திருக்கிறார். முதலமைச்சர் சொன்ன மூன்றாவது மணி நேரத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரு அமைச்சர் நிற்கிறார் என்று சொன்னால்,  அந்த கோவிலை சரிபடுத்தி,  முப்பது நாளுக்குள் மீண்டும் அதே இடத்தில் அர்ச்சனை நடப்பதற்கு ஒரு ஆட்சி, ஒரு அமைச்சர், ஒரு முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார் என்றால் நாங்கள் எப்படி இந்துக்களுக்கு விரோதி ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |