Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொட்டித் தீர்த்த மழை…. ஏரியில் உடைப்பு…. அதிகாரிகளின் செயல்….!!

கனமழையால் ஏரியில்  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்த காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பாக திடீரென பெய்த கனமழையின் காரணத்தினால் சிறுவளையம் ஏரியின் மத்தியில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது பற்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி தயாளன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மதகை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பனப்பாக்கம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு உதவி பொறியாளர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பொக்லைன் எயந்திரம் உதவியுடன் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இதன் மூலமாக தண்ணீர் வெளியேறுவதை தடுத்துள்ளனர். மேலும் இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |