பனை மரத்து ஏரியில் மீன் வளர்த்திட 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை கலெக்டர் விட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் உத்தரவின் படி மீனவர் நலத்துறை மற்றும் மீன்வளம் மூலமாக 2020-2021 ஆம் வருடத்திற்கான தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தின் பஞ்சாயத்து ஏரி மற்றும் குளங்களில் 50,000 எண்ணிக்கையில் இந்தியப்பெருங்கண்டை லோகு, மிர்கால் மற்றும் ரக கட்லா மீன் குஞ்சுகள் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள வசூர் கிராமம் பனை மரத்து ஏரியில் மீன் வளர்த்திட கலெக்டர் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டுள்ளார். இவை 4 மாதத்திற்குப் பின்னர் நன்கு வளர்ந்ததும் ஊராட்சி மன்றத்தின் மூலமாக பொது ஏலம் விடப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் இதன் மூலமாக கிடைக்கும் வருவாய் ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.